தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாறுமாறாக ஓடிய கார்.. உள்ளே போலீஸ் போர்டு.. வைரலாகும் வீடியோ! - police drunk and drive - POLICE DRUNK AND DRIVE

Police atrocity: தாம்பரம் அருகே மது போதையில் காரை ஓட்டி வந்ததாக காவலரிடம் இருசக்கர வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மது போதையில் காரை ஓட்டிய காவலரின் புகைப்படம்
மது போதையில் காரை ஓட்டிய காவலரின் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 4:10 PM IST

Updated : Jun 2, 2024, 4:28 PM IST

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று நள்ளிரவு 11 மணியளவில் விக்னேஷ் தனது உறவினருடன், தாம்பரம் மண்ணிவாக்கம் சாலையில் முடிச்சூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது, கருப்பு நிற கார் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தை இடிப்பது போல் சென்று தாறுமாறாக ஓட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மது போதையில் காரை ஓட்டிய காவலரின் வீடியோ (credits-ETV Bharat Tamil Nadu)

இதனைத் தொடர்ந்து, சக வாகன ஓட்டிகள் மற்றும் விக்னேஷ் இணைந்து அந்த காரை மடக்கிப் பிடித்து, கார் ஓட்டுநரிடம் ஏன் இப்படி காரை ஓட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்பொழுது, காரில் போலீஸ் என்ற பெயர் பலகை இருப்பதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், காரில் காவலர் உடையும், அதில் ஸ்ரீராமதுரை என்ற பெயரும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் அவரிடம் ஏன் இப்படி காரை ஓட்டுகிறீர்கள் எனக் கேள்வி கேட்ட பொழுது, அங்கு என்ன நடக்கிறது என தெரியாமல் காவலர் இருந்துள்ளதாக தெரிகிறது. இதைப் பார்த்த பிறகு காவலர் போதையில் இருப்பதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். பின்னர், பொதுமக்கள் பல கேள்விகளைக் கேட்டும் அவர் பதிலளிக்க முடியாத நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நடுரோட்டில் அலப்பறை.. மனைவியை பார்க்க வந்த கணவர் மது மயக்கம்! - Traffic Affected By Drunken Man

Last Updated : Jun 2, 2024, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details