தஞ்சாவூர்: குழந்தைகளை தாக்கும் கொடிய நோயான போலியோ நோயை முற்றிலும் அழிக்க, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாளை 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் தொடங்கி, மாநகரங்கள் வரை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து விதமான பொது இடங்களிலும், பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நாள் முழுவதும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு தனி ஆளாக பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு அதிகாரி! - போலியோ விழிப்புணர்வு
Polio Drops Campaign: பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நாளை நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Published : Mar 2, 2024, 5:04 PM IST
இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இது குறித்து பொதுமக்களிடமும், தாய்மார்களிடமும் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இன்று பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், தன்னந்தனி ஆளாக கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், பாட்டு பாடிய படி பொதுமக்களுக்கும், தாய்மார்களுக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, நாளைய போலியோ சிறப்பு முகாம் குறித்தும், அதில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தஞ்சை பெரிய கோயில் கருவறையில் சிவபுராணம் பாடி அசத்திய குழந்தைகள்!