தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மின்சார ரயில்கள் ரத்தால் பேருந்துகளில் நிரம்பி வழியும் கூட்டம் -அலுவலகம் செல்வோர் அவதி! - Traffic in chennai - TRAFFIC IN CHENNAI

Traffic in chennai: புறநகர் மின்சார ரயில்கள் ரத்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கியும், அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிவதால், அலுவலக நேரங்களில் மட்டும் இன்னும் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல், காத்திருக்கும் பயணிகள்
போக்குவரத்து நெரிசல், காத்திருக்கும் பயணிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 3:53 PM IST

சென்னை:தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை செங்கல்பட்டு - தாம்பரம் வரையும், தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரையையும், புறநகர் மின்சார ரயில்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையிலும் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து அவர்களின் வசதிகளுக்காக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக 70 கூடுதல் சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் காலை முதல் வழக்கம் போல் அலுவலகம், கல்லூரி, பள்ளிகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலிருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிந்து வருகின்றன.

குரோம்பேட்டை, தாம்பரம் பேருந்து நிலையங்களில் அதிகப்படியான பயணிகள் காத்திருப்பதால் இன்னும் கூடுதலான மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காலை நேரத்தில் அதிகப்படியானோர் வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்வதால் அந்த நேரத்தில் மட்டும் கூடுதலான சிறப்பு பேருந்துக்கள் இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:சுதந்திர தினவிழா: சென்னையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. வழித்தட விபரங்கள் உள்ளே..! - Independence Day rehearsal

ABOUT THE AUTHOR

...view details