தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தில் சீட்பெல்ட் அணிய மறுத்து பணிபெண்களுடன் வாக்குவாதம்.. மேற்கு வங்க பயணியால் களேபரம்! - PASSENGER FIGHT IN FLIGHT - PASSENGER FIGHT IN FLIGHT

PASSENGER FIGHT IN FLIGHT: சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த விமானத்தில் மேற்குவங்க மாநில பயணி ஒருவர் சீட் பெல்ட் அணிய மறுத்து விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

CHENNAI AIRPORT
CHENNAI AIRPORT (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 1:21 PM IST

சென்னை:மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சர்போஜீத் பவுல்தாஸ் (31). இவர் கோவையில் இயங்கி வரும் ஒரு தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சர்போஜித் பவுல் தாஸ் அவருடைய சொந்த ஊருக்கு போவதற்காக நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோவையில் இருந்து டிரான்சிட் பயணியாக சென்னைக்கு வந்துள்ளார்.

பின்னர், மீண்டும் நேற்று இரவு சென்னையில் இருந்து மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கொல்கத்தா செல்வதற்காக ஏறியுள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமான பணிப்பெண்கள், பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியும்படி கூறியுள்ளனர்.

ஆனால் சர்போஜித் பவுல் தாஸ், சீட் பெல்ட் அணிய மறுத்ததோடு எதற்காக சீட் பெல்ட் போட வேண்டும் என்று விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான பணிப்பெண்கள் அந்தப் பயணி குறித்து விமான கேப்டனிடம் புகார் கொடுத்த நிலையில், உடனடியாக விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விமான பாதுகாப்பு அதிகாரிகள் பயணி சர்போஜித் பவுல் தாஸை விமானத்திலிருந்து கீழே இறக்கி, அவரது கொல்கத்தா விமான பயணத்தையும் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவத்தால், விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், விமான பாதுகாப்பு சட்ட விதிமுறையை மீறி சீட் பெல்ட் அணிய மறுத்ததோடு விமான பணிப்பெண்கள் இடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்ட காரணத்தால் பயணி சர்போஜித் பவுல்தாஸை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் சர்போஜீத் பவுல் தாஸை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 7.9 லட்சம் விண்ணப்பங்கள்; ஒரு பணியிடத்துக்கு முட்டி மோதவுள்ள 340 பேர்! - tnpsc group 2 exam

ABOUT THE AUTHOR

...view details