சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டணி தொடர்பாக சந்தித்துப் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், தேமுதிகவிற்கு சாதகமான தொகுதிகள் எனத் தேர்வு செய்துள்ள 7 தொகுதிகளில், 3 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும், அதிமுக தரப்பில் தேமுதிகவிடம் வலியுறுத்தல் எனவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, கூடுதலாக 1 நாடாளுமன்றத் தொகுதி கூட ஒதுக்கீடு செய்வதாக தேமுதிகவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.