தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! - Papanadu gang rape case - PAPANADU GANG RAPE CASE

Papanadu gang rape case: பாப்பாநாடு இளம் பட்டதாரி பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 10:50 PM IST

தஞ்சாவூர்: பாப்பநாடு பகுதியில் இளம் பட்டதாரி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 17 வயது இளம் குற்றவாளிகள் இருவர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திட தஞ்சை மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்ததன் பேரில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவுப்படி, மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்

இதையும் படிங்க:தஞ்சை கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் உட்பட 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாசன் (25), பிரவீன்(20), திவாகர்(27) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர்

ABOUT THE AUTHOR

...view details