சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி,செல்வி தம்பதியினர். இவர்களது மகள் ரேகா(18) சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியின் வீட்டில் வேலை புரிந்து வந்துள்ளார்.
ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மெர்லினா தம்பதியினர் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் என்பது குறிப்பிடதக்கது. கடந்தாண்டு மே மாதம் வீட்டு வேலை செய்வதற்க்காக ரேகா, மாதம் 16 ஆயிரம் சம்பளம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
ஆனால் பணிப்பெண் ரேகாவுக்கு பேசிய சம்பளம் கொடுக்காமல் மாதம் 5000-ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜீலை மாதம் ரேகா பணி செய்ய விருப்பம் இல்லை சொந்த ஊருக்கே செல்வதாக மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் ஆகியோரிடம் கூறியுள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதியினர் ரேகாவை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியும் அடித்து துன்புறுத்தி முகம், கை, கால் பகுதிகளில் சூடு வைத்து கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி பொங்கல் அன்று மெர்லினா, ஆண்ட்ரோ மதிவாணன் தம்பதி இருவரும் ரேகாவை அழைத்துக்கொண்டு ரேகாவின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விட்டு விட்டு வந்துள்ளனர். அப்போது ரேகாவுக்கு முகம், கை, கால்களில் காயம் இருப்பதை கண்ட தாய் செல்வி அதிர்ச்சியடைந்த நிலையில் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமணை மூலம் கள்ளக்குறிச்சி போலிசாருக்கு தகவல் தெறிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ரேகாவிடம் விசாரணை மேற்க்கொண்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ரேகா DGP அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆன் ஆகிய இருவர் மீதும் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட வண்கொடுமை சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபசமாக பேசுவது, தாக்கியது, கொலைமிரட்டல் விடுத்தது உள்ளிட்ட
ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.
இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், உடனடியாக சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சென்னை அழைத்து வரப்படும் இருவரிடமும் விசாரணை நடத்தி பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?