தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சோ்ந்தவர் நல்லகண்ணு (50). இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலராக உள்ளார். இந்நிலையில், இவர் நேற்று (பிப்.17) மாலை ஸ்ரீவைகுண்டம் - சுப்பிரமணியபுரம் சாலையில் வந்தபோது, அவரை மர்ம நபர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், டிஎஸ்பி மாயவன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கொலை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நல்லக்கண்ணுவுக்கும், ஆதிச்சநல்லூா் ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கர் கணேஷ்-க்கும் (42) இடையில் முன் விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், சங்கர் கணேஷ் மனைவி பார்வதி ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.