தமிழ்நாடு

tamil nadu

தொடர் விடுமுறையால் உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்; பார்வையாளர்களை ஈர்க்கும் தாவரவியல் பூங்கா! - Ooty Botanical Garden Visit

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 7:23 PM IST

Ooty Botanical Garden Holiday Visit: கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

உதகை  தாவரவியல் பூங்கா
உதகை தாவரவியல் பூங்கா (Credits- ETV Bharat Tamil Nadu)

நீலகிரி:மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில் உள்ள வானுயர்ந்த மரங்கள் மற்றும் கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் அங்குள்ள இத்தாலி பூங்கா மற்றும் புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் விளையாடியும், இதமான காலநிலையை அனுபவத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால், உதகை நகரப் பகுதிகளில் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்து, பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஒகேனக்கல் நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு..பரிசல் இயக்க அனுமதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை! -

ABOUT THE AUTHOR

...view details