தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறுதிச் சடங்கு மேளம் அடிக்கும் தொழிலில் போட்டி.. இளைஞர் மின் மயானத்தில் வெட்டிக்கொலை! - youth death in Tiruvallur - YOUTH DEATH IN TIRUVALLUR

Youth Death In Tiruvallur: பூந்தமல்லி அருகே தொழில் போட்டி காரணமாக மேளம் அடிக்கும் இளைஞரை மின் மயானத்திலேயே வெட்டிப் படுகொலை செய்த வழக்கில், முக்கிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், மேலும் இரு நபர்களை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர்
கொலை செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 4:27 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருமழிசையைச் சேர்ந்தவர் மேளம் அடிக்கும் தொழிலாளி நாகராஜ் (30). இவர் திருமழிசையில் உள்ள மின் மயானத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன், மயானத்தில் ஆண் சடலத்தை எரியூட்டுவதற்காக இவர் உட்பட 3 பேர் பணிகளை மேற்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள், நாகராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர். அதில், நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைத் தடுக்க வந்த முத்துகிருஷ்ணன் என்பவரையும் அந்த 3 நபர்கள் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த முத்துகிருஷ்ணனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், வெட்டப்பட்டு இறந்தவரின் உடலையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபரான கிஷோர் என்ற அப்பு என்பவரை வெல்லவேடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜாலியாக தொடங்கிய மெட்ராஸ் மெட்ராஸ் கார் பேரணி! - Chennai Women Car Rally

ABOUT THE AUTHOR

...view details