திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை இரண்டு தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷ வாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு..! - One killed in poisonous gas attack
Bio Gas attack: திருவள்ளூர் மாவட்ட ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள் இருவரில் ஒருவர் விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Etv Bharat
Published : Jan 23, 2024, 5:29 PM IST
மயங்கி இருந்த மற்றொரு தூய்மை பணியாளர் ரமேஷ் என்வரை அப்பகுதி பொதுமக்கள் வீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:விமானத்தை கண்டுபிடித்த நீர் மூழ்கி.. முதல் காட்சியை வெளியிடும் ஈடிவி பாரத்!