திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட பழமையான மத்திய சிறைச்சாலை உள்ளது. சுமார் 118 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 297 அறைகளில், சுமார் 1,333 கைதிகள் வரை அடைத்து வைக்கலாம்.
ஏறக்குறைய ஆயுள் தண்டனை கைதிகள் தண்டனைப் பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடைத்துவைக்கப்பட்டு இருப்பது வழக்கம். இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்கசி போன்ற தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
இதில் தண்டனை பெறும் கைதிகள் சிறைக்குள் வைத்தும் சாதி ரீதியாக மோதி கொள்ளும் சம்பவம் நடைபெற்றதால் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் சாதி வாரியாக கைதிகள் குழுக்களாக பிரிக்கப்படுவதோடு, இரவு நேரத்தில் நான்கு செல்களில் அடைத்து வைப்பது வழக்கம். காலையில் அவர்களை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.