தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும்" -மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பேச்சு - DMK LAW WING CONFERENCE

திமுக சட்டப்பிரிவின் மூன்றாவது மாநாட்டில் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் அடிப்படையிலேயே தவறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

திமுக சட்டப்பிரிவு நடத்திய மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்த விவாதம்
திமுக சட்டப்பிரிவு நடத்திய மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்த விவாதம் (Image credits-ETV Bharat via DMK Legal WIng)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 1:39 PM IST

சென்னை:திமுக சட்டப்பிரிவின் மூன்றாவது மாநாட்டில் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் அடிப்படையிலேயே தவறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாட்டை நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல், திராவிடவியல்,இந்திய மக்களாகிய நாம் என்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைப்பெற்றன.

அடிப்படையில் குறைபாடு:திமுக சட்டத்துறை மாநாட்டில் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், "ஒரே நாடு ஒரே தேர்தல் கோட்பாட்டில் அடிப்படையிலேயே குறையாடு உள்ளது. அரசு நம்பிக்கை இழந்துவிட்டால் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு பிரச்னை உள்ளது,இந்தியா என்பது ஒன்றியங்களின் அரசு. அதுதான் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும்.

ஒன்றியங்களை சிதைத்து ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு,ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி என்பதை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இதை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்திய குடியரசின் ஜனநாயக பணிகளின் அடிப்படை கூறுகளை சிதைக்கும் முயற்சி தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை,"என்றார்.

தேர்தல் செலவு அதிகரிக்கும்:இதையடுத்து பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி," ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்தால் தற்போது ஆகும் தேர்தல் செலவை விட மூன்று மடங்கு கூடுதலாக செலவு ஆகும். அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒரு கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுப்பு தேவைப்படும். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விலை 35 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. எனவே ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் போது கூடுதல் செலவு ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும்," என்றார்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு,பொன்முடி,ரகுபதி,தங்கம் தென்னரசு,மா சுப்பிரமணியன் மற்றும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவின் சட்ட பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details