தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்!" - சங்கம் அறிவிப்பு! - OMNI BUSES

தமிழகத்தின் தென்பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் பணிமனைகள், போரூர் டோல்கேட் ஆகிய இடங்களிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆம்னி பேருந்து கோப்புப்படம்
ஆம்னி பேருந்து கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 9:45 PM IST

சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலைய அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிச 7ம் தேதியன்று திறந்து வைத்தார். இந்த பேருந்து நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலும் மற்றும் போரூர் டோல்கேட் அருகிலும் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன் படி, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் டோல்கேட்டில் இருந்து தமிழகத்தின் தென்பதிகளுக்கு இயக்கப்படும்.

மேலும், தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியைச் சேர்ந்த மற்றும் ஈசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்திற்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றிச் செல்கிறோம்.

இதையும் படிங்க :"விஸ்வகர்மா திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாது" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

இந்த பேருந்து நிலையம் அந்த ஏரியா பயணிகளுக்கு மிக்க பயனுள்ளதாக உள்ளது. மேலும், இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார மற்றும் மெட்ரோ ரயில் கனெக்டிவிட்டி செய்து முடிக்கும் போது பயணிகளுக்கு அதிக பயன்களை தரும். ஈசிஆர் சாலை வழியாக பாண்டிச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

தமிழக தென்பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் டோல்கேட் ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details