தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெம்பக்கோட்டையில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான ஜாஸ்பர் கற்கள் கண்டெடுப்பு! - VEMBAKOTTAI EXCAVATION

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட ஜாஸ்பர், சர்ட் கற்கள்
வெம்பக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட ஜாஸ்பர், சர்ட் கற்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 1:32 PM IST

விருதுநகர்:வெம்பகோட்டை அருகே விஜய கரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரையில் தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் பழமையான அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அகழ்வாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், “இந்த கற்கள் நுண் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அகழாய்வு நடைபெறும் இடம் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில், “ வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:விருதுநகர் விஜய கரிசல்குளம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு!

'சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது. இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details