தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதை தான்.. மத்திய பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து! - Union Budget 2024 - UNION BUDGET 2024

OPS about Union Budget 2024: மத்திய அரசு பட்ஜெட் இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 4:49 PM IST

Updated : Jul 23, 2024, 6:09 PM IST

தேனி: பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் தேனி மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேனி மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு குறித்து நிர்வாகிகளிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மத்திய பட்ஜெட் குறித்து கேட்ட கேள்விக்கு, "மத்திய பட்ஜெட், நல்ல பட்ஜெட். மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட், இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது.

இந்த பட்ஜெட் மூலம் அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளில் அடைகின்ற இலக்கை 5 ஆண்டுகளில் அடைவோம். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட், நல்ல பட்ஜெட் எனக் கூறி வரவேற்றதோடு அவர்களுக்கு எனது வாழ்த்து என தெரிவித்தார்.

மேலும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறித்த கேள்விக்கு, சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது சில காரணங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதில் கூட்டணி, அரசியல் என எந்தவித காரணங்களும் கிடையாது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.

பீகாரில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில் 11,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்படும் வெள்ள சேதங்களுக்கு அரசு கேட்கும் நிதியை ஒதுக்குவதில்லை என கேட்டபோது, பாதிப்புகளுக்கு உண்டான அரசாணையின் படி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை என ஓபிஎஸ் பதில் அளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பெண்ணிடம் 25 பவுன் நகையை ஏமாற்றிய காவலர்.. தேனி ஆட்சியர் அலுலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு! - Theni

Last Updated : Jul 23, 2024, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details