தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் வழக்கு; ஆவணங்களில் கையெழுத்திட்டார் ஓ.பன்னீர்செல்வம்! - OPS ELECTION CASE - OPS ELECTION CASE

OPS ELECTION CASE: தேர்தல் தோல்வியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆஜராகி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

OPS,MP NAVASKANI
OPS,MP NAVASKANI (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 4:28 PM IST

சென்னை:நடத்த முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணிக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம் 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேநேரம், அவரை எதிர்த்து பாஜக் கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குப் பின் தேர்தல் வழக்கு தொடர வேண்டும் என்ற நடைமுறையின் படி, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், திமுக வேட்பாளர் பல ஆவணங்களை மறைத்துள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக நீதிமன்றத்திற்கு இன்று (செவ்வாய்கிழமை) வந்திருந்தார்.நீதிமன்றத்திற்கு வந்த பன்னீர்செல்வம், நீதிமன்ற பதிவாளர் முன்பு ஆஜராகி அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டார். பின்னர், நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வங்கதேசத்தில் கோயில்கள் மீது தாக்குதல்: போராட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் முறையீடு! - Madras High court

ABOUT THE AUTHOR

...view details