சென்னை: மத்திய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு, வரும் மார்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில், 2024ஆம் ஆண்டில் இளநிலை படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் நேற்று தொடங்கியது.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர பொதுத்தேர்வு அறிவிப்பு - முழு விவரம்! - யுஜிசி கியூட் 2024
CUET UG 2024: மத்திய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு, வரும் மார்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
Published : Feb 28, 2024, 12:21 PM IST
https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் மார்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மே 15 மற்றும் மே 31 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மீண்டும் தள்ளுபடி.. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறிய காரணம் என்ன?