தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை கோட்ட புதிய கூடுதல் ரயில்வே மேலாளராக எல்.என்.ராவ் பொறுப்பேற்பு - SOUTHERN RAILWAY MADURAI - SOUTHERN RAILWAY MADURAI

New Additional DRM for Madurai: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் புதிய கூடுதல் ரயில்வே மேலாளராக எல்.என். ராவ் பொறுப்பு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இதுவரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த சி.செல்வம் சென்னைக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

மதுரை ரயில் நிலையம், எல்.என். ராவ்
மதுரை ரயில் நிலையம், எல்.என். ராவ் (Credits - india rail info website, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 9:25 AM IST

மதுரை:தெற்கு ரயில்வேயின் மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக எல். என் ராவ் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இது குறித்து மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளதாவது, "மதுரை கோட்டத்தின் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக எல்.என். ராவ் நேற்று (ஜூலை 31) பதவி ஏற்றார். இவர் 2002ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பொறியியல் பிரிவை சேர்ந்த ரயில்வே அதிகாரி ஆவார்.

இதற்கு முன்பாக மேற்கு ரயில்வே இந்தூர் கட்டுமானப் பிரிவில் துணை முதன்மை பொறியாளராக பணியாற்றினார். ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கட்டட வடிவமைப்பு பிரிவில் முதுநிலை பட்டய கல்வி பயின்றுள்ளார். புனே கட்டட மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி தேசிய பயலகத்தில் முதுநிலை நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.

ரயில் பாலங்கள், குகைகள், ரயில் பாதை மேம்பாலங்கள், புதிய ரயில் பாதை திட்டங்கள் மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் நல்ல அனுபவம் பெற்றவர். கடந்த 33 வருடங்களாக ரயில்வே துறையில் மேற்கு ரயில்வே பகுதியில் உதவி கோட்ட பொறியாளர், முதுநிலை கோட்ட பொறியாளர் மற்றும் மும்பை தனி சரக்கு ரயில் பாதை அமைப்பின் துணை திட்ட மேலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இதுவரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த சி.செல்வம் சென்னைக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

join ETV Bharat WhatsApp channel Click here (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:ஈடிவி பாரத் எதிரொலி; ஜீரோ டிராபிக் பெருங்களத்தூர்.. நாளை மேம்பாலம் திறப்பு! - New flyover in perungalathur

ABOUT THE AUTHOR

...view details