தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர்களுடன் தொழிலாளராக மூட்டை தூக்கி வாக்கு சேகரித்த நீலகிரி நாதக வேட்பாளர்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

NTK candidate Jayakumar: நீலகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் பகுதியில் உருளைக்கிழங்கு மூட்டைகளைத் தோளில் சுமந்தும், தொழிலாளர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் வாக்கு சேகரித்தார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 3:30 PM IST

தொழிலாளர்களுடன் தொழிலாளராக மூட்டை தூக்கி வாக்கு சேகரித்த நீலகிரி நாதக வேட்பாளர்!

கோயம்புத்தூர்:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனால், தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் மாநில தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ. ஜெயக்குமார் இன்று கோயம்புத்தூர் மாநகரம் மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மண்டி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

உருளைக்கிழங்கு மண்டிக்கு சென்ற அவர், லாரியில் வந்த உருளைக் கிழங்கு மூட்டைகளை பாரம் தூக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து தோளில் சுமந்து மண்டியில் மூட்டைகளை இறக்கி வைத்தார். மேலும் உருளைக்கிழங்கு மண்டிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆண், பெண் தொழிலாளர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர், மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் இரண்டு, நான்கு சக்கர வாகன பேரணி மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். இந்தப் பேரணி ராமசாமி நகர், ஊமப்பாளையம், பாலப்பட்டி, எஸ்.எம். நகர், பஸ் நிலையம், காரமடை ரோடு வழியாகச் சென்று வீரபாண்டியில் நிறைவடைந்தது.

இதையும் படிங்க:கோயம்புத்தூர் தொகுதியில் வெல்லப் போவது யார்? தனியார் நிறுவனம் கருத்துக் கணிப்பு கூறுவது என்ன? - Coimbatore Constituency

ABOUT THE AUTHOR

...view details