நீலகிரி:நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பாஜக வேட்பாளர் எல்.முருகனை விட 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தள விபரம்..
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1. | ஆ.ராசா | திமுக | 4,73,212 |
2. | எல்.முருகன் | பாஜக | 2,32,627 |
3. | லோகேஷ் தமிழ்செல்வன் | அதிமுக | 2,20,230 |
4. | ஜெயக்குமார் | நாதக | 58,821 |
- நீலகிரி மக்களவைத் தொகுதியில், 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக - 3,17,577, பாஜக - 1,57,767, அதிமுக - 1,38,541, நாம் தமிழர் கட்சி - 36,421 வாக்குகளை பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் ஆ.ராசா 1,59,810 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
- நீலகிரி மக்களவைத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் ஆ.ராசா 1,96,547 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 1,07,059 அதிமுகவின் லோகேஷ் தமிழ்செல்வன் 91,984 மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 21,686 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, ஆ.ராசா, எல்.முருகனைவிட 89,488 வாக்குகள் அதிகம் பெற்று மூன்னிலையில் உள்ளார்.
தேயிலை உற்பத்தி மற்றும் விற்பனை, சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள் நீலகிரி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. 2024 மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா, அதிமுக வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக சார்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.