தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் நியமனம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு! - புதிய நிர்வாகிகள் நியமனம்

TN Congress Committee: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இரண்டு துணைத் தலைவர்கள் மற்றும் மூன்று பொதுச் செயலாளர்களை நியமித்து கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் நியமனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:40 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகையும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ். ராஜேஷ்குமார் ஆகியோரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை கடந்த 17ஆம் தேதி அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டது பேசு பொருளாக மாறிய நிலையில், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து செல்வப்பெருந்தகை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களாக கோபன்னா மற்றும் சொர்ண சேதுராமன் ஆகியோரும், கட்சியின் பொதுச் செயலாளர்களாக டி. செல்வம், கே. தணிகாசலம், மற்றும் என். அருள் பெத்தையா ஆகியவரை நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவகத் திறப்பு விழாவில் செல்வப்பெருந்தகை பங்கேற்க முடியாத நிலையில், விழா மிக மிக சிறப்பாக அமைந்திட வேண்டும் எனவும் இதற்காக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என தெரிவித்திருந்தார்.

குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பை ஏற்று டெல்லி செல்ல வேண்டி இருக்கக்கூடிய சூழ்நிலையில் நினைவகத் திறப்பு விழாவில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொள்வார் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:விண்வெளி ஆராய்ச்சியில் குவியப்போகும் வேலை வாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது என்ன?

ABOUT THE AUTHOR

...view details