சென்னை:போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமலும், விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும் இன்று வருகை விமானங்கள் 5, புறப்பாடு விமானங்கள் 5 என மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதால், விமானங்கள் ரத்து காரணமாக பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்