சென்னை: தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் 83 பாடங்களுக்கான யுஜிசி நெட் (UG NET) தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் ஜூன் மாதம் நடைபெற்றது. ஆனால், நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற்றது.
11 லட்சத்து 21 ஆயிரத்து 225 பேர் தேர்விற்கு பதிவு செய்த நிலையில், 6 லட்சத்து 84 ஆயிரத்து 224 பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, பிஎச்டி படிக்க தகுதியுடையவர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில் 53 ஆயிரத்து 694 பேரும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு (JRF-Junior Research Fellowship) 4 ஆயிரத்து 970 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.