தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம்.. 200க்கும் மேற்பட்ட தமிழக போட்டியாளர்கள் பங்கேற்பு! - SHOOTING COMPETITION

33-வது அகில இந்திய ஜிவி மாவ்லங்கர் துப்பாக்கி சுடும் போட்டியை முன்னாள் டிஜிபி சேகர் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

துப்பாக்கி சுடும் போட்டி
துப்பாக்கி சுடும் போட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 7:14 PM IST

சென்னை:சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் 33-வது அகில இந்திய ஜிவி மாவ்லங்கர் துப்பாக்கி சுடும் போட்டி துவங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சேகர் கலந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

ஏர் பிஸ்டல், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், சென்டர் ஃபயர், ஃப்ரீ பிஸ்டல் என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டி வருகிற 11ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1 ஆயிரத்து 700 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என வகைபடுத்தபட்டு 10 வயது முதல் 70 வயது வரை என இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க:பிரேக் டான்ஸை விளையாட்டாக தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க கோரிக்கை!

இதில் வெற்றி பெறுபவர்கள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் செயலாளர் வேல் சங்கர் பேசுகையில், “குருநானக் கல்லூரியில் உள்ள சதாகிரி ஷூட்டிங் அகாடமி வளாகத்தில் 33வது அகில இந்திய ஜிவி மாவ்லங்கர் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது.

வருகிற 11ஆம் தேதி வரை இப்போட்டி நடக்கிறது. மேலும் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்கள் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க வாய்பு கிடைக்கும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details