தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திரைத்துறை அனுபவம் மட்டும் போதாது”.. விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வு குறித்து சீமான்! - seeman - SEEMAN

நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பாஜக ஆதரவை விட்டு விலகினால் திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் சீமான் புகைப்படம்
விஜய் மற்றும் சீமான் புகைப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 8:03 AM IST

புதுக்கோட்டை:நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம், புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாதக சீமான் செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

முன்னதாக, இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான், இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொடி, அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "திமுக 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு இருக்குமா? மாநில சுயாட்சி என்று வெற்று வரலாற்றை தவிர வேறு எதையையும் அவர்கள் செய்யவில்லை.

விஜய், அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை போட்டதை வரவேற்கிறேன். அதேபோல், முத்துராமலிங்கத் தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திருவிக உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும். என்னுடன் கூட்டணிக்கு யாரும் வருவார்கள், போவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

விஜய் வந்த பிறகு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக நான் பார்க்கவில்லை. ஆனால், பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியாரும் போராடினார் என்பது தான் என் கருத்து.

தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை அனுபவம் மட்டும் போதாது. துணிவு வேண்டும், நமது வரலாறு, மொழி உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும். வருவார் என்ற நம்பிக்கை உள்ளது, விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று அவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பாஜக ஆதரவை விட்டு விலகினால், திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும். உதயநிதி துணை முதலமைச்சராகி என்ன செய்யப் போகிறார், அவருக்கு பசி என்றால் என்ன என்று தெரியுமா? விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆர்.எஸ்.பாரதியையும், டி.கே.எஸ்.இளங்கோவனையும் அனுப்புவதற்கு பதிலாக டி.ஆர் பாலுவையும், ஜெகத்ரட்சகனையும் தான் அனுப்ப வேண்டும்.

ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும். 2026 தேர்தலிலும் தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details