கோயம்புத்தூர்:கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் MyV3 Ads நிறுவனத்தின் மீது பொய்யான தகவல்கள் பரப்புவதாகக் கூறி, நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் தலைமையில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடந்த பிப்.10ஆம் தேதி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மனு அளித்ததுடன், மாநகர காவல் ஆணையாளரை பார்த்துவிட்டுத்தான் செல்வோம் என ஆணையாளர் அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இரவோடு இரவாக சக்தி ஆனந்த் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், ஒரு நாள் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.15) மதியம் வரை விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு முன்னதாக, ஜாமீன் கேட்டு சக்தி ஆனந்த் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேற்றிரவு வெளியே வந்தார். இந்நிலையில், வெளியில் வந்தவுடன் Myv3Ads M D Forum என்ற யூடியூப் சேனலில் ஒரு ஆடியோவை பதிவேற்றி உள்ளார்.
Thalaivar Is Back என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆடியோ பதிவில், "நம் நிறுவனத்திற்கு எதிராக பல நபர்கள் பல விதங்களில் இடையூறுகள் ஏற்படுத்தினாலும், எல்லாவற்றையும் சட்டத்தின் துணை கொண்டு, தர்மத்தின் துணை கொண்டு மக்கள் சக்தி கொண்டு, இறை சக்தி கொண்டு, இயற்கை சக்தி கொண்டு, அனைத்தையும் முறியடித்து, நிறுவனத்தின் செயல் திட்டம், நோக்கம் என்னவோ, நம்முடைய லட்சியம் என்னவோ, அதை நோக்கி நிறுவனம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.