சென்னை:தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது சட்டப்பேரவை மரபாக இருக்கிறது. இந்நிலையில் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதற்கு தமிழக அரசின் உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது.
இந்நிலையில், முரசொலி நாளிதழில் ஆளுநர் உரை குறித்து செய்தி வெளியாகி உள்ளது. அதில், "உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்? அவரால் ஒப்புதல் தரப்பட்ட உரையை அவரே வாசிக்க மறுக்கிறார். இதில் உள்ளது தனக்கு உடன்பாடு இல்லாதது என்கிறார். உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல் தர வேண்டும், உடன்பாடு இல்லாத உரையை வாசிக்க மறுக்க எதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்ப வேண்டும். அதை ஆளுநர் மாளிகையில் இருந்தே சொல்லி அனுப்பி இருக்கலாமே.