வேலூர்:கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனையில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு, பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் கிடங்குகளில் சோதனை நடத்தி 11.55 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.