கோயம்புத்தூர்: குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில், காரில் பயணித்த தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அணை புதூரை சேர்ந்தவர் ஆஷா (41). இவரது மகன்கள் அனுப்ராஜா (4) அபிலேஸ்வரன் (15) மற்றும் அவரது மகள் அஸ்வதி (21) ஆகியோர் திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் உள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு விமல்ராஜ் (35) என்பவரின் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை விமல்ராஜ் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், அந்த கார் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, பாப்பாத்தி பள்ளம் அருகே வந்த போது நிலை தடுமாறி இடது புறம் இருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.