தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியவர்கள் உள்ள சிறையிலிருந்து செல்போன் பறிமுதல்! - MOBILE SEIZED IN JAIL - MOBILE SEIZED IN JAIL

MOBILE SEIZED IN POONAMALLEE JAIL: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியவர்கள் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி தனி கிளைச் சிறை வளாகத்தில் இருந்து செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி தனி கிளை சிறை
பூந்தமல்லி தனி கிளைச் சிறை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 4:52 PM IST

சென்னை:பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் தனி கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த தனி கிளைச் சிறையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை சிறைக் கண்காணிப்பு அதிகாரி ஜேம்ஸ் தலைமையில் தனி கிளைச் சிறையில் உள்ள கைதிகளின் ஒவ்வொரு அறையிலும் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாறன் என்பவரது அறையில் சோதனை செய்த போது ஒரு செல்போன், சிம் கார்டு, இரண்டு பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பூந்தமல்லி போலீசாரிடம் சிறைக் காவலர்கள் புகார் அளித்த நிலையில், செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட அந்த அறையில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பூந்தமல்லி போலீசார் செல்போன், சிம் கார்டுகளைக் கொண்டு வந்து கொடுத்த நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேர் மற்றும் பிரபல ரவுடி படப்பை குணா உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இந்த தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிறை வளாகத்தில் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "நீங்கள் பேசினால் அது கருத்துரிமை, நாங்கள் பேசினால் அது அவதூறா?" - சீமான் ஆவேசம்! - NTK leader Seeman

ABOUT THE AUTHOR

...view details