தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“காலம் உள்ளவரை கலைஞர்” கண்காட்சியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்! - MK Stalin in Karunanidhi Expo

MK Stalin: சென்னையில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்ட காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கண்காட்சி ஏற்பாட்டாளர்களை கவுரவித்தார்.

கண்காட்சியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்
கண்காட்சியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 1:16 PM IST

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் “காலம் உள்ளவரை கலைஞர்” என்ற கண்காட்சியகம் மே 1ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது, அவருடன் சேர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும், திரைப்பட பாடலாசியர் பா.விஜய் மற்றும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரும் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

இப்பிரம்மாண்ட அரங்கத்தில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை என 140-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள கண்காட்சி நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இறுதியாக கண்காட்சி ஏற்பாட்டாளர்களை மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

தையும் படிங்க:“பலவீனமான பாஜகவை முழக்கங்களால் செயல்பட வைக்க வேண்டும்” - திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details