தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சைக்கிள் ஓட்டலாம் வாங்க" - ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் அன்பான அழைப்பு! - mk stalin cycle - MK STALIN CYCLE

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோவை குறிப்பிட்டு, 'சென்னையில் எப்போதும் நாம் இருவரும் சைக்கிள் ஓட்டுவோம்' என்று ராகுல் காந்தி கேட்டிருந்தார்.

சிகாகோவில்  சைக்கிள் ஓட்டும் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்
சிகாகோவில் சைக்கிள் ஓட்டும் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம் (Credits - M.K. Stalin X Page, ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 8:25 PM IST

ஹைதராபாத்:தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சிகாகோவில் பாட்டுப்பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்ற பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "சகோதரரே நாம் இருவரும் எப்போது சைக்கிள் ஓட்டுவோம்"என ஆவலுடன் கேட்டிருந்தார்.

இந்த வீடியோவிற்கு கட்சித் தொண்டர்கள், மக்கள் என பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த நிலையில் ராகுல் காந்தி பதிவிற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின், "அன்புள்ள சகோதரரே ( ராகுல்காந்தி) ஓய்வு கிடைக்கும் போதுதெல்லாம் நாம் ஒன்றாக சைக்கிளில் பயணித்து சென்னையின் இதயத்துடிப்பை அனுபவிப்போம். தங்களுக்கு கொடுக்க வேண்டிய இனிப்பு இன்னும் பாக்கியுள்ளது. சைக்கிள் ஓட்டிய பிறகு இனிப்புடனான தென்னிந்திய மதிய உணவை எனது வீட்டில் சாப்பிடலாம்" என்று தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இனிப்பான நிகழ்வு:சில மாதங்களுக்கு முன், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகம் வருகை புரிந்து இருந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக, தமது பயணத்தின் இடையே நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ஓர் கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கினார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் "யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் ?" என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக" என்று பதிலளித்தார்.

பொதுக்கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார். அப்போது, தான் வாங்கி வந்த ஸ்வீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார் ராகுல் காந்தி. அதனை மிகுந்த அன்போடு பெற்றுக்கொண்டார் ஸ்டாலின். இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.

இதையும் படிங்க:ரூ.15 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராமேஸ்வரம் தீவு! அரசாணை வெளியீடு -

ABOUT THE AUTHOR

...view details