தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"முதல் தலைமுறை வாக்காளர்களின் விருப்ப தேர்வாக இந்தியா கூட்டணியாக இருந்துள்ளது" - தமிமும் அன்சாரி..! - MJK leader Thamimun Ansari

MJK leader Thamimun Ansari: அயோத்தி ராமரை காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க முடியாது என்பதை வாக்காளர்கள் இந்த தேர்தலில் காட்டியுள்ளனர் என மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 7:01 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே வாணதிராஜபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் ஹாஜா சலீம் என்பவரின் இல்ல விழாவில், அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக பாடுபட்ட தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா கூட்டணி மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று எதிர்க்கட்சிகளின் சங்கமமாக உள்ளது. பாஜவிற்கு வாக்குகளை குறைத்தும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்களித்தும் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். நாடு முழுவதும் முதல் தலைமுறை வாக்காளர்களின் விருப்பத் தேர்வு இந்தியா கூட்டணியாக இருந்திருக்கிறது.

நாங்கள் அசைக்க முடியாத சக்தி என்று கூறிய பிரதமர் மோடி, பாஜவை அசைத்துப் பார்த்து இந்திய வாக்காளர்கள் நிரூபித்துள்ளனர். உபியில் குறிப்பாக அயோத்தியில், பாஜவிற்கு தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். ராமரை வைத்து அரசியல் செய்யக்கூடாது, முடியாது, இந்தியர்கள் சகோதரர்களாக இருப்போம்.

ராமரைக் காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க முடியாது என்பதை வாக்காளர்கள் காட்டியுள்ளனர். அயோத்தி ஃபைசாபாத் தொகுதியில் பெரும் தோல்வியை பாஜகவிற்கு வாக்காளர்கள் கொடுத்த தீர்ப்பை புரிந்துகொண்டு, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, வெறுப்பு அரசியலை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் நாட்டின் ஒருமைப்பாடு வளர்ச்சிக்கு பிரதமர் பாடுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இவிஎம் இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டுடன் வாக்களிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் மீது சந்தேகம் உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் போது, எதிர்கட்சிகளுக்கு தெளிவுபடும் வகையில் வாக்கு எண்ண வேண்டும் என்று அறிவிக்கின்றனர்.

இந்தியா கூட்டணி முன்னிலையில் இருக்கும்போது இது போன்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜக 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சிதைந்து இருக்கிறது. பஞ்சாப்பில் சர்ச்சைக்குரிய இரண்டு வேட்பாளர்கள் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில் பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஜகவின் அணுகுமுறையால் பல்வேறு மாநில மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உணர்வுகளையும் உள்ளடக்கி, 3வது முறையாக நீங்கள் ஆட்சி செய்யுங்கள் என்று சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி பேசும் மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்பதுதான் அவர்கள் திட்டம். அதனை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:“எடப்பாடி பழனிசாமி ஐந்து நிமிடம் சிந்தித்தால் போதும்..” கே.சி.பழனிசாமி கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details