தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கவனத்தை ஈர்க்கச் சீண்டிக்கொண்டே இருப்பார்" பாஜக அண்ணாமலை குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு! - T R B Rajaa

Minister T.R.B. Rajaa: சாலையில் விளையாடும் குழந்தைகள் பிறரின் கவனத்தை ஈர்க்க எதையாவது செய்யும். அதேபோல் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலும் உள்ளது. அதைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு
டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 8:39 PM IST

"இது போன்ற சில்லறைத்தனமான வேளைகளை கண்டு கொள்ள கூடாது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான கர்த்தனாதபுரம் பாலம் கட்டும் பணியினைத் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இருக்கும் கூட்டணிகளிலேயே வலுவான கூட்டணி இந்தியா கூட்டணி மட்டுமே. எதிரணியில் கதவு ஜன்னல் என அனைத்தும் திறந்து இருந்தாலும் யாரும் செல்லவில்லை. காற்று மட்டுமே வருகிறது.

தேர்தல் எந்திரம் இன்றி வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே பல்வேறு கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருந்த போதும் வாக்களிக்கும் இயந்திரத்தில் இந்த முறை எத்தகைய குளறுபடி நடைபெற்றாலும் திமுக தலைமையிலான கூட்டணி பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 40க்கு 40 வெல்லும்.

சாலையில் விளையாடும் குழந்தைகள் பிறரின் கவனத்தை ஈர்க்க எதையாவது செய்யும். அதேபோல் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலும் உள்ளது. நம் கவனத்தை ஈர்க்கச் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். அதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கும் உலகிற்கும் கொண்டு செல்லும் முயற்சியில் உள்ளோம். எனவே, இது போன்ற சில்லறைத்தனமான வேலைகளைக் கண்டு கொள்ளக் கூடாது. வெற்றியை நோக்கிச் சென்று கொண்டே இருக்க வேண்டும்

டெல்டா பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஆட்சியில் வரலாற்றில் இல்லாத வகையில் தஞ்சைக்கு சிப்காட் தொழிற்சாலையும் மன்னார்குடிக்குச் சிறிய தொழில் பூங்காவும் கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்" என்று தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

இதையும் படிங்க:நடுபாலைவனத்தில் 60 நாட்கள் சிக்கிய ஆடுஜீவிதம் படக்குழு.. கதையோடு நிஜமும் சேர்ந்ததன் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details