கோயம்புத்தூர்:சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் எஸ் (YES) சர்வதேச நிறுவனத்தின் கோவை கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக தொழில், முதலீடு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் மற்றும் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசுகையில், “ தொழில் அனுமதி ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மின் வாகனங்கள், ஜவுளி ஆகிய தொழில்களுக்கு தமிழகம் முன்னணி மையமாக உள்ளது. தமிழகம் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக மாறும். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா கொடியையும் ஏற்றி வையுங்கள். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தெரியவரும்.
தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் ரூ. 7ஆயிரத்து 513 கோடி முதலீடு பெற்று வேலைவாய்ப்பை பெற்று வந்துள்ளனர். அமெரிக்காவில் கையெழுத்தான ஒப்பந்தம் படி இந்நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கோவையை தொழில் மையமாக மாற்ற உள்ளோம். பன் சிங்கிள் எலிமெண்ட் என்றால் காம்பவுண்ட் எலிமெண்ட் கிரீம்பன். நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என தெரியவில்லை. நான் அமெரிக்காவில் இருந்தேன். நான் எதார்த்தமாக பேசி வருகிறேன். நீங்கள் ஏதாவது நினைத்தால் நான் பொறுப்பில்லை" என நகைச்சுவையாக பேசினார்.
இதையும் படிங்க:20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.. செப்.28ல் டாடாவின் ஜாக்குவார், லேண்ட்ரோவர் தொழிற்சாலைக்கு அடிக்கல்.. ராணிப்பேட்டை மக்களுக்கு ஜாக்பாட்!
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது, “ கோவையில் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. மின்னணு உற்பத்தியிலும் தற்போது கோவை தடம் பதித்துள்ளது. எஸ் நிறுவனம் கோவையில் தனது கிளையை துவக்கியுள்ளதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சிறுகுறு தொழில் முனைவோருக்கு மத்திய அரசு அதிக அளவில் உதவி செய்ய வேண்டும்.
சாலை பணிகள்:பாதாள சாக்கடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்ததால் சாலைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் தரமான முறையில் சீரமைக்கப்படும்.
கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்டிருந்த கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் வாக்குறுதி குறித்து, தேர்தல் முடிந்து அடுத்த சில நாட்களில் விளையாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து, அவரே இடத்தை தேர்வு செய்தார். தற்போது அதற்கான திட்டங்கள் தயாராக உள்ளது. விரைவில் மிகப் பிரம்மாண்டமாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவது உறுதி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.