சென்னை: விஐடி சென்னையில் சர்வதேச 'டெக்னோ விஐடி 24' என்ற தொழில்நுட்பத் திருவிழா நேற்று முன் தினம் (செப்.19) தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் ரோபோ நிகழ்ச்சி, ட்ரோன் நிகழ்ச்சி உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளை கண்டு ரசித்தனர். இந்நிலையில், டெக்னோ விஐடி-24 யின் நிறைவு விழா இன்று (செப்.21) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியதாவது, "மாணவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக கருத வேண்டும். இந்தியா சேவைகளுக்கான இடமாக திகழ்ந்து வருகிறது. அரசியலைப் பற்றி வெளியில் இருந்து குறை கூறாமல், சட்டம் இயற்றுபவர்களை தகுதியானவர்களாக தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை முறைகளை பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பொது மக்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொண்டால் தான் பிறரை கேள்வி எழுப்ப முடியும். அரசியலில் மாணவர்களுக்கு ஆர்வம் அவசியம் வேண்டும். அதை மாணவர்களுக்கு சரியான முறையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். தமிழக அரசு மாணவர்களின் தொழில்நுட்பத் திட்டங்களை வரவேற்கிறது. சிறந்த திட்டங்களாக இருந்தால் தேவையான வழிகாட்டுதலை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.