சென்னை: நடப்பாண்டிற்கான (2024 -2025) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற தொல்லியல் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
"வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு! - TN Assembly Session 2024 - TN ASSEMBLY SESSION 2024
TN Assembly Session 2024: அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களுக்கு புதிதாக அருங்காட்சியகம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை தொல்லியல், மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Jun 27, 2024, 10:35 AM IST
தொல்லியல் துறை சார்ந்த 9 புதிய அறிவிப்புகள்:
- தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளை படித்து நூலாக வெளிக்கொணரும் சிறப்பு திட்டம் ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னங்களை மேம்படுத்தி உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் புதிதாக மின்னொளியுடன் கூடிய சிற்பக்காட்சிக்கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் உட்கட்டமைப்பு மற்றும் முகப்பு மின்விளக்குகள் ரூ.2.75 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதியினை ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உள்ளடக்கிய புதியதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- தொல்லியல் துறையின் அகழ்வைப்பகங்களுக்கான மேம்பாட்டு நிதியினை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
- தொல்லியல் துறையில் 20 சார் அலுவலகங்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கு மடிக்கணினி கேமரா மற்றும் உபகரணங்கள் ரூ.50 லட்சம் செலவில் வாங்கி வழங்கப்படும்.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.