சென்னை:அதிமுக ஆட்சியில் முந்தைய 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மின் இணைப்புகள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 592 மட்டுமே. ஆனால், 3 ஆண்டு திமுக ஆட்சியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்ததால், 3 லட்சத்து 38 ஆயிரத்து 380 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முதையாக 1989-1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார். 2010-2011 ஆம் ஆண்டில், 77 ஆயிரத்து 158 இலவச வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க:'ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்'.. பத்திரிகையாளர் முகமது சுபைருக்கு கனிமொழி ஆதரவு குரல்!
3 ஆண்களில் திமுக சாதனை:இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1லட்சத்து 69 ஆயிரத்து 564 புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-2021 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 592 மட்டுமே. ஆனால், திமுக ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1லட்சத்து 69 ஆயிரத்து 564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இதனால், 3 லட்சத்து 38 ஆயிரத்து 380 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்