சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அந்த வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெகந்நாதன் சாலையில் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகத்தின் முன்னேற்பாடு பணிகளையும், கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்திலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக பெரியார் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவி புரிகிற வகையில், அரசின் சார்பில் பயன்படுத்துகின்ற பெரிய துறையாக போக்குவரத்து துறை உள்ளது. அந்த வகையில், முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையத்தை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, தற்போது விழாக் காலங்களிலும் கூட அந்த பேருந்து நிலையம் அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்ற அளவிற்கு ஒரு நல்ல தரத்தோடு செயல்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த காலத்தில் துவங்கப்பட்டிருந்தாலும், அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாததால், புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு பயணிகளின் தேவைகளைக் கேட்டு அறிந்து, அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி, தொடர்ந்து வருகின்ற காலங்களில் அந்தப் பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டு, கட்டமைப்புகளை உருவாக்குகின்ற பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.
இதையும் படிங்க:கரோனா ஊரடங்கில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க கூடாது - சென்னை ஐகோர்ட் உத்தரவு!