தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைக்கு இத்தனை திட்டமா? - சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - TN Assembly Session 2024

TN Assembly Session: சென்னையில் நேற்று நடைப்பெற்ற சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவதாத்தில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, சென்னையில் உள்ள ஏரிகள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும் என 46 அசத்தல் அறிவிப்புகளை அறிவித்தார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 1:29 PM IST

சென்னை:நடப்பாண்டிற்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. முதல் நாள் பேரவையில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் மற்றும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கபட்டு, பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 21) மானிய கோரிக்கை மீதான விவதாம் நடைப்பெற்றது. அப்போது, அமைச்சர்கள் தங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டத் தொகுதி சென்னை பெருநகர் வளர்ச்சி குழும மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடலில் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ.10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட 2024 - 25ஆம் ஆண்டிற்கான சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 46 அறிவிப்புகளை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:

  • மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ.10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.
  • சென்னை பெருநகர் பகுதியில் வெள்ள நிகழ்வுகளின் போது அவசரக்கால நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கும் வெள்ள அபாயத்தை குறைப்பதற்கும், வெள்ள கட்டுப்பாடு வரைபடம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் தயாரிக்கப்படும்.
  • அண்ணா சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் நகர மறுசீரமைப்பு செய்து, தண்ணிரைவு பகுதிகளாக உருவாக்க உள்ளூர் பகுதி திட்டம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
  • சென்னை பெருநகரின் நகர்புற மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பின் அழகியல் தரத்தை பாதுகாத்தல் மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தலை உறுதி செய்வதற்கும் நகரின் தனித்தன்மையை ஒருங்கிணைத்து பாதுகாக்கும் வகையிலும் நகர்ப்புற வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் உருவாக்கப்படும்.
  • சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்கா (Eco Park) ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • சேப்பாக்கம் பகுதியில் மக்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் இரத்த சுத்திகரிப்பு மையம் (Dialysis Centre) அமைக்கப்படும்.
  • தி.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடி வீதம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • தாம்பரத்தில் உள்ள DR.A.P.J.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள 10 சுரங்கப் பாதைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளுடன் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • திருவிக நகர் - கொன்னூர் நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சமுதாயக்கூடம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • இராயபுரம் மூலகொத்தளத்தில் 0.35 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில் சிறிய ரக கால்பந்து மைதானம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • அம்பத்தூர் பானு நகரில் நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • சென்னையில் உள்ள சமுதாயக் கூடங்கள் ரூ.52 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • ஆர்.கே. நகர் இளையா தெருவில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல் ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • போரூர் ஏரி ரூ.10 கோடி மதிப்பிலும், பெருங்குடி ஏரி ரூ.10 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட 46 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 'பிங்க் ஆட்டோ' - அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details