தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனிப்பான செய்தி.. இந்தாண்டு பொங்கல் தொகுப்பில் இதெல்லாம்மா..? - அமைச்சர் தகவல் - PONGAL GIFT IN RATION SHOP

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.

பொங்கல் தொகுப்பு குறித்து அமைச்சர் பெரிய கருப்பன்
பொங்கல் தொகுப்பு குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தொகுப்பு விற்பனையை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பு அங்காடியில் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தொடங்கி வைத்தார்.

மூன்று வகையான சிறப்பு திட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதாவது; பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருள் தருவதே கூட்டுறவு துறையின் நோக்கம். இத்துறையின் சார்பாக பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று வகையான சிறப்பு திட்டம் அறிமுகம் செய்துள்ளோம்.

199 ரூபாய்க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு:

பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்ட இனிப்பு பொங்கல் தொகுப்பு.

499 ரூபாய்க்கு கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு:

மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் உள்ளிட்ட 19 பொருட்கள் கொண்டது கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பாகும்.

999 ரூபாய் கொண்டது பெரும் பொங்கல் தொகுப்பு:

மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டதாகும்.

இதையும் படிங்க:"அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க வேண்டும்" - டிடிவி தினகரன் பேட்டி!

கிறிஸ்துமஸ் என்றால் கேக்

தை 1ம் நாள் தான் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நான்கு நாள் கொண்டாட்டமாக பொங்கல் திருநாளை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் என்றால் கேக், ரம்ஜான் என்றால் அசைவ உணவு, தீபாவளி என்றால் பலகாரம். பொங்கலை பொறுத்தவரை கரும்பு பிரதானம், அதோடு பொங்கல் வைப்பது சிறப்பு.

கடந்த ஆண்டைப் போலம், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்களில் கரும்பு இருக்கும். கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சியடையவும், கூடுதலான வர்த்தகம் பெறவும் அவர்கள் கொடுத்த அறிவுரைப்படி, இது போன்ற சிறப்பு தொகுப்பு விற்பனை செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த கூட்டுறவு பொங்கல் திட்டம் இன்று முதல் தொடங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் அவசியம். தமிழக முதலமைச்சர் இதுபோன்ற சிறப்பு தொகுப்புகளை பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்து விற்பனை செய்வதன் மூலம் கூட்டுறவுத்துறை மேம்பாட்டுக்கு உதவும் என்று அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் அறிவிப்பார்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை எப்போது வழங்க தொடங்க வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் அறிவிப்பார். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதமர் பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனை சாலைகளில், சுய சேவை பிரிவு விற்பனை நிலையங்களில் இந்த சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை இருக்கும்.

காலி பணியிடங்கள்

ரேசன் கடைகளில் 3,440 காலி பணியிடங்களுக்கு இரண்டு லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். விரைவில் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூட்டுறவுத்துறை சார்பாக 58 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசோடு கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details