தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மெரினா மரணங்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரியாக்‌ஷன் என்ன?

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்காமல் கடந்துச் சென்றார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை ஏர் ஷோ, நிர்மலா சீதாராமன்
சென்னை ஏர் ஷோ, நிர்மலா சீதாராமன் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருவாரூர் தியாகராஜ கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று(அக்.7) மதியம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். அப்போது சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க விரும்பாமல் நிர்மலா சீதாராமன் விமான நிலையத்திற்குள் சென்றார்.

அதன் பின் விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹரியானா மாநிலத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது என கேட்டபோது, அதற்குள் உங்களுக்கு முடிவுகள் தெரிந்து விட்டதா? இறுதியில், காங்கிரஸ் கட்சியினுடைய லட்சியங்கள் தான் வெல்லும் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது" எனக் கூறினார்.

நிர்மலா சீதாராமன் விமான நிலையம் வருகை, ப சிதரம்பரம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க :மெரினா மரணங்கள்: கனிமொழி சொன்ன அட்வைஸ்! மா.சு. கொடுத்த ரியாக்ஷன்!

தொடர்ந்து பேசிய அவர், "இடையில் எங்கள் லட்சியங்களை மாற்று லட்சியங்கள் வெல்வது மாதிரி தெரிந்தாலும், இறுதியில் காங்கிரஸ் உடைய லட்சியங்கள், கொள்கைகள் தான் வெல்லும். அது நாளை நிரூபணமாகும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் ஐந்து பேர் உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு, இது வருந்தத்தக்கது, துரதிஷ்டவசமானது. பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் பார்த்தேன். என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் வருந்தத்தக்கது, துரதிஷ்டவசமானது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details