கோயம்புத்தூர்:கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு வேளாண் துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பயிர் ரகங்களின் செயல் விளக்க திடல்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களின் கண்காட்சியை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஒரு நல்ல முடிவை கொடுத்துள்ளது. இதை மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.