சென்னை: சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வீட்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் தெரு ஓரம் காகிதம் எடுத்து பிழைப்பவர் அமைச்சரைப் பார்த்து வணக்கம் தெரிவித்துள்ளார்.
உடனே அவரை அழைத்து அமைச்சர் விசாரித்தபோது, அவர் தான் கஷ்டப்படும் நிலைமையை கூறி உள்ளார். அதன்பின் அமைச்சர் தன்னுடைய வாகனத்திலே கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்திற்கு அழைத்துச் சென்று குளிக்கச் சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கி உள்ளார்.
மேலும், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் அவர் நன்றாக இருக்கிறார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது. பேப்பர் எடுத்து வாழ்க்கை நடத்தியவரின் வாழ்க்கையை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாற்றி அமைத்துக் கொடுத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: "உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தால் காங்கிரஸ் வரவேற்கும்" - செல்வப்பெருந்தகை! - Selvaperunthagai ABOUT DPCM POST