சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டையில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் பல்வேறு புதிய பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை இன்று துவக்கியுள்ளது குறித்த கேள்விக்கு, "ஜைக்கா நிறுவனத்தின் துணைத் தலைவரைச் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வழங்குவது குறித்தும், 5 ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ளது.
இதனை விரைந்து கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போது 2024-இல் இறுதியில் பணிகள் துவக்கப்பட்டு, 2028இல் முடியும் என கூறினார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதியில் துவக்கப்படுவதை முன்கூட்டியே துவக்கி உள்ளனர்" என்று பதிலளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மக்களுக்கு திமுக வெள்ளத்தின்போது எதுவும் செய்யவில்லை என பிரதமர் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "தேர்தலுக்கு முன்னர் இன்னும் 4 தடவை சென்னைக்கு வந்து சுற்றிப் பார்த்து விட்டு, அதன் பின்னர் கூறினால் ஏற்றுக் கொள்வோம்.