தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 6:51 PM IST

ETV Bharat / state

சென்னை மாநகராட்சி வார்டு 200ல் இருந்து 300ஆக வாய்ப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல் - KN NEHRU ABOUT CHENNAI WARD

Minister KN Nehru on chennai corporation wards rise: சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலுரை நிகழ்த்திய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறினார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு (PHOTO CREDITS: ETV Bharat Tamil Nadu)

சென்னை:2024 - 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதத்து வருகின்றனர்.முதல் நாளான ஜூன் 20ஆம் தேதி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஜூன் 21 தேதி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர்கள் தங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 22ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்றாம் நாளான இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டவைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலுரையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

இதுவரை சென்னை மாநகரில் மொத்தம் மக்கள் தொகை 89 லட்சமாக உள்ளது. இதில் 200 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாகவும் மக்கள் வசிக்கின்றனர். எனவே சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் தற்போது இருக்கும் 200வார்டுகள் 300வார்டுகளாக ஆக உயர வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை பகுதிக்கு புதிய வாகன கொள்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details