தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்" - வலுக்கும் கோரிக்கையை பழுக்க வைத்த அமைச்சர்! - Udhayanidhi Stalin Future Deputy CM

Minister Geetha Jeevan :மகளிர் உரிமைத் தொகை திட்டம், 'வருங்கால துணை முதல்வர்' உதயநிதி ஸ்டாலின் துறையின்கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 9:49 PM IST

தூத்துக்குடி:கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நகர செயல்வீரர்கள் கூட்டம், நகர் மன்ற செயலாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.

அமைச்சர் கீதா ஜீவன் (Video Credit - ETV Bharat Tamilnadu)

கூட்டத்தில் அவர் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் திமுக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 40க்கு 40 வெற்றி பெற தொண்டர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார். அதன்படி, நமது நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்ததற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து நம்முடைய இலக்கு 2026 சட்டமன்ற தேர்தலில், 220 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திமுகவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பேசி வருகின்றனர். இதை திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைக்காக 1 கோடியே 50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1 கோடியே 18 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் 31 தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும்” என்று கீதாஜீவன் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கும்பகோணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டி..உற்சாகமாக பங்கேற்ற இளம்பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details