வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி துவங்கி 14 நாட்கள் நடைபெற்று வந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
விழா மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu) இதற்கு முன்னதாக, விழா மேடையில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழக முதலமைச்சர் விளையாட்டு துறையில் தனிக்கவனம் செலுத்தி அதனை முன்னிலைப்படுத்தி வருகிறார். சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் நிதி வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
உலகில் விளையாட்டுத் துறை தான் முன்னிலையில் உள்ளது. மேலும், கடந்த காலங்களில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள், போரில் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளை போடுவது என வல்லரசு நாடுகளுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது.
இதையும் படிங்க:மீண்டும் அமைச்சர் ஆகிறாரா செந்தில் பாலாஜி? - அமைச்சர் அன்பில் மகேஷ் சூசக பதில்!
ஆனால், தற்போது அதெல்லாம் மறைந்து, எந்த நாடு எந்த விளையாட்டில் சிறந்தது என்று பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக முந்திக்கொண்டு போட்டியிடுகின்றனர். இத்தகைய காலகட்டத்தில் தமிழ்நாடு தன்னை இணைத்துக் கொண்டு அதில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எனவே, விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்" என்று கூறினார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "இந்த விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் என்னிடம் கோரிக்கை வைத்தார். அடுத்த நிகழ்ச்சிக்குள் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருக்கும் இந்த விளையாட்டு மைதானத்திற்கு ஒவ்வொரு மாதமும் நான் வந்து இங்கே என்னென்ன தேவை என்பதை அறிந்து அதனை உங்களுக்காக செய்ய உள்ளேன்" என்று மாவட்ட ஆட்சியர் வைத்த கோரிக்கைக்கு உடனடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்