தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் AI படிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி! - AI Courses In Govt Schools

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு (AI) சம்பந்தமான படிப்பை கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 10:03 AM IST

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு (AI) சம்பந்தமான படிப்பை கொண்டு வர முழு முயற்சியும் நடைபெற்று வருகிறது. அதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 525 அரசுப் பள்ளி மாணவர்கள் ஐ ஐ டி, என் ஐ டி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்து குறை கூறுபவர்களுக்கு இதுவே சான்றாக இருக்கும்.

இந்த 500 மாணவர்களின் எண்ணிக்கை, வரும் கல்வி ஆண்டுகளில் 1000-த்திற்கும் மேல் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் தான் பள்ளிக் கல்வியில் முன்னோடியாக திகழ்கின்றன.

இதையும் படிங்க:நிதி அமைச்சர் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

தரமான கல்வியை தருகிறோம். மத்திய அரசு வழிகாட்டும் 20 நெறிமுறைகளில் 18 நெறிமுறைகளை சிறப்பாக பின்பற்றி தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசு நிதி முக்கியமாக உள்ளது. உண்மையில் நாங்கள் கேட்கும் நிதியை விட மத்திய அரசு அதிகமாகத்தான் தர வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, இந்த கல்வி முறை சிறப்பானதாக உள்ளது என மற்ற மாநிலங்களுக்கும் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். சிறப்பான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதி முக்கியமானதாக உள்ள நிலையில் அதில் கைவைப்பது வேதனைக்குரியதாக உள்ளது.

மேலும், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஹைடெக் லேப்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details